2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் "மனித உரிமை மீறல்கள்" மற்றும் "அவுஸ்திரேலியா தொடர்ந்து எழுப்பி வரும் பல பிரச்சினைகளுக்கு" பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
எனினும் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கெடுப்பார்கள் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் இது தொடர்பான அறிவிப்பினை சீனா கண்டித்துள்ளதுடன், பதிலடி கொடுப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் தொடர்பாக பிஜிங்களில் நடைபெறும் 2022 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தூதரக அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா திங்களன்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment