அமைச்சுப் பதவி பறிபோகும் என்பதை நன்கு அறிந்தே யுகதனவி விவகாரத்தில் நாட்டுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

அமைச்சுப் பதவி பறிபோகும் என்பதை நன்கு அறிந்தே யுகதனவி விவகாரத்தில் நாட்டுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றினை நாடியுள்ளோம். யுகதனவி விவகாரத்தில் மூன்று அமைச்சர்களின் செயற்பாடு தவறென ஜனாதிபதி கருதினால் எம்மை தாராளமாக அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கலாம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளமை சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

நாட்டுக்கும்,பொதுமக்களுக்கும் சாதகமான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டியது அமைச்சரவையின் பொறுப்பாகும்.

யுகதவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தை வலுவிழக்கு செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு சாதகமாக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சர்கள் சத்தியக்கடதாசி சமர்ப்பித்துள்ளமை அமைச்சரவை கூட்டுப் பொறுப்பிற்கு முரண் என்பதை நன்கு அறிவோம்.

அமைச்சரவை கூட்டுப் பொறுப்பை காட்டிலும் மனசாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் யுகதனவி விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும்,அரசாங்கத்தின் கொள்கையினையும் பாதுகாத்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்குண்டு.

அமைச்சரவை தீர்மானத்திற்கு முரணாக செயற்படுகையில் அமைச்சுப் பதவி பறிபோகும் என்பதை நன்கு அறிந்தே யுகதனவி விவகாரத்தில் நாட்டுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எமது செயற்பாடு தவறு என ஜனாதிபதி கருதினால் எம்மை அமைச்சு பதவிகளில் இருந்து தாராளமாக நீக்கலாம்.

நான் உள்ளிட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயகார ஆகியோர் யுகதவனி ஒப்பந்தம் தொடர்பில் உயர் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த சத்தியக் கடதாசியின் உள்ளடக்கம் பொய் எனில் அரசாங்கம் சார்பில் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு சமர்பித்த சத்தியக் கடதாசியின் உள்ளடக்கம் உண்மை, எமது சத்தியக் கடதாசியின் உள்ளடக்கம் உண்மையாயின் சட்டமா அதிபர் சமர்ப்பித்த விடயம் பொய்யாகும்

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இரு தரப்பிலும் ஒரு தரப்பினர் சமர்ப்பித்த சத்தியக் கடதாசியின் உள்ளடக்கம் பொய். நீதிமன்றிற்கு பொய்யான விடயங்களை சமர்ப்பிப்பது 3 வருட கால தண்டணைக்குரிய குற்றமாகும். ஆகவே இவ்விடயத்தில் யாரை சிறைக்கு அனுப்ப வேணடும் என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment