பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர். கல்முனை பிராந்தியத்தில் 4 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எயிட்ஸ் நோயானது ஒருவரின் நிர்பீடண சக்தியை இல்லாதொழிக்கின்றது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் குறிப்பிட்டார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வெள்ளிக்கிழமை (10) மாலை விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில், ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 1ம் திகதி உலக எயிட்ஸ் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
1981ம் ஆண்டு முதலாவது எயிட்ஸ் நோயாளி இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை 36 மில்லியன் மக்கள் இந்த எயிட்ஸ் நோயினால் இறந்துள்ளனர். 37 மில்லியன் மக்கள் இன்று வரை எயிட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் 2,600 பேர் சிகிச்சையை எயிட்ஸ் நோய்க்காக பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இன்றும் இலங்கையில் 1,000 எயிட்ஸ் நோயாளிகள் எம்மிடையே மறைந்து வாழ்கின்றனர்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர். கல்முனைப் பிராந்தியத்தில் 4 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ் நோயானது ஒருவரின் நிர்ப்பீடண சக்தியை இல்லாதொழிக்கின்றது.
எயிட்ஸ் நோய் 3 முறைகளில் பிரதானமாக பரவலடைகின்றது. அதாவது, பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடு, தாய் தந்தையினுடாக பிள்ளைக்கு கடத்தப்படுதல், பாதுகாப்பற்ற ஊசிகள் மற்றும் இரத்த மாதிரிகளின் ஊடாகவும் பரவுகின்றன.
இலங்கையைப் பொறுத்தமட்டில் பாதுகாப்பற்ற முறையில் ஆண், ஆணுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் 40 வீதத்திற்கும் அதிகமாக எயிட்ஸ் அதிகரித்துச் செல்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் என்றார்.
No comments:
Post a Comment