மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை பழைய மாணவர்களினால் "முஸ்லிம் நேசன்" பத்திரிகையின் பிரதி காத்தான்குடி பூர்வீக நூதன சாலைக்கு கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை பழைய மாணவர்களினால் "முஸ்லிம் நேசன்" பத்திரிகையின் பிரதி காத்தான்குடி பூர்வீக நூதன சாலைக்கு கையளிப்பு

எம்.பஹ்த் ஜுனைட்

முஸ்லிம் சமூகத்தின் சட்ட வல்லுனரும், பத்திரிகையாளருமான அறிஞர் மு.கா. சித்திலெவ்வை அவர்களால் கி.பி. 1883 முதல் "முஸ்லிம் நேசன்" பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது.

இலங்கை இஸ்லாமியர்களின் தமிழ் மொழி இதழியல் வரலாற்றில் முதல் இதழாகக் கருதப்படுகின்ற முஸ்லிம் நேசன் பத்திரிகையின் கி.பி. 1905ம் ஆண்டு வெளியிடப்பட்ட பத்திரிகைப் பிரதி சனிக்கிழமை (04) மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை பழைய மாணவர்களினால் (2004 சாதாரண தரம்) காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு அன்பளிப்பாக காத்தான்குடி நகர முதல்வர் SHM அஸ்பர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகர முதல்வர் SHM அஸ்பர் JP , மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment