வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு : ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து அரசு - News View

Breaking

Tuesday, December 7, 2021

வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு : ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து அரசு

இயந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இயந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்குகூட ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்திருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

ஆம், சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் அந்த இயந்திரத்தை பயன்படுத்த அந்த நாட்டு அரசே ஒப்புதல் வழங்கியுள்ளதுதான்.

சுவிட்சர்லாந்தில் கருணைக் கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக் கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் ‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக் கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். 

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடுமாம். 

அடுத்தாண்டு முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment