நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் வெட்டு நாசகார செயலா ? : விசாரணைகள் ஆரம்பம் என்கிறது அரசு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 8, 2021

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் வெட்டு நாசகார செயலா ? : விசாரணைகள் ஆரம்பம் என்கிறது அரசு

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட மின் துண்டிப்பு திட்டமிடப்பட்ட செயற்பாடா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அது குறித்த உண்மை தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுகதனவி ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பான தகவல்கள் இரு வருடங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பானதாகும்.

இது தொடர்பில் மின்சார பொறியலாளர் சங்கம் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின் போதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின் துண்டிப்பு திட்டமிடப்பட்ட செயற்பாடா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளின் மூலம் கிடைக்கப் பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அது குறித்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment