கிராமிய வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் 06 கோடியே 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சூடுபத்தினசேனை வீதியானது கொங்ரீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஹாபிஸ் நாசிர் அஹமட்டின் முயற்சியினால் இவ்வீதிக்கான நிதி ஒதுக்கீடு மேட்கொள்ளப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வீதியானது கொவிட்-19 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்ற பகுதியான மஜ்மா நகரை சூழவுள்ள பகுதியாகும். இவ்வீதி அபிவிருத்தியானது அப்பிரதேச மக்களுக்கு போக்குவரத்தினை இலகுபடுத்தி கொடுத்திருக்கின்றது.
நேற்று (3) நடைபெற்ற இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர், செயலாளர் சிகாப்தின், கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் கல்குடா ஒருங்கிணைப்பாளர்களான எம்.ஹாஷிம் மௌலவி, எம். ஜாவாத் மற்றும் ஊர் மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
No comments:
Post a Comment