திருமணத்திற்கு சென்ற பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 31 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, December 6, 2021

திருமணத்திற்கு சென்ற பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 31 பேர் பலி

கென்யாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பஸ் விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

இந்நிலையில், தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர் ஒரு பஸ்சில் நேற்றுமுன்தினம் (4) சென்று கொண்டிருந்தனர்.

அங்கு கிடுய் கவுண்டியில் உள்ள என்சியூ என்ற ஆற்றின் பாலத்தின் மீது வேகமாக ஓடிய வெள்ள நீரை பஸ் கடந்து செல்ல முயற்சித்தது. அப்போது அந்த பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 31 பேர் பலியானதாக கூறுகின்றனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment