கனடாவில் இரு TNA எம்.பிக்கள் அவமதிப்பு குறித்து நாமல் கவலை : ஐக்கியம், பேச்சுவார்த்தையே சிறந்தது என டுவிட்டரில் பதிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

கனடாவில் இரு TNA எம்.பிக்கள் அவமதிப்பு குறித்து நாமல் கவலை : ஐக்கியம், பேச்சுவார்த்தையே சிறந்தது என டுவிட்டரில் பதிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குரல் கொடுத்துள்ளார். 

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த போது புலம்பெயர் சமூகத்தின் அவர்களை நடத்திய விதம் கவலையளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய வழிகளின் மூலமே நாடு முன்னோக்கி நகர முடியும் என்பதனை புலம்பெயர் சமூகங்கள் புரிந்து கொள்ளும் என நம்புவதாகத் தெரிவித்துள்ள அவர், பிரிவிணையின் ஊடாக எதனையும் அடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பி ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளை நடாத்துவதே சிறந்தது என்பது தமது நிலைப்பாடாகும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment