வெளிநாட்டில் சிகிச்சை பெற அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Tuesday, November 23, 2021

வெளிநாட்டில் சிகிச்சை பெற அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நோயுற்றிருக்கும் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதாசியா சிகிச்சை பெற வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கோரி ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது பங்களாதேஷ் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டதோடு 20 பேர் வரை காயமடைந்தனர்.

தற்போதைய பிரதமர் செய்க் ஹசினாவின் போட்டியாளரான 76 வயதான சியா, இந்த மாத ஆரம்பத்தில் டாக்கா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

2018 இல் ஊழல் குற்றச்சாட்டில் குற்றங்காணப்பட்ட அவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டாக்காவில் நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சியைச் சேர்ந்த 15,000 க்கும் அதிகமான ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டபோதும் சுமார் 7,000 பேர் வரையே கலந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment