வாய் மூலம் உட்கொள்ளும் 'Molnupiravir' கொவிட் வில்லைக்கு இலங்கையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Monday, November 15, 2021

வாய் மூலம் உட்கொள்ளும் 'Molnupiravir' கொவிட் வில்லைக்கு இலங்கையில் அனுமதி

கொவிட்-19 தொற்று தொடர்பான மருந்தான 'Molnupiravir' வில்லையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஒளடத உற்பத்திகள், வழங்குகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நிபுணர்கள் குழுவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு விடுத்த கோரிக்கை தொடர்பில் பரிசீலித்த பின்னர் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 தொற்று தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதித்தல் மற்றும் மரணமடைதல் வீதத்தை 50% ஆக குறைக்கும் வாய் மூலமான உள்ளெடுக்கும் மருந்தை Merck எனும் மருந்து உற்பத்தி நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அதனை தமது நாட்டில் பயன்படுத்த ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியிருந்தது.

கொவிட்-19 நிபுணர்கள் குழுவிடம் இது தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை வழங்குமாறு சன்ன ஜயசுமணவினால் கடந்த மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment