வெலிகமவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயம் - News View

Breaking

Thursday, November 4, 2021

வெலிகமவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயம்

வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் சமையல் அறையில் இன்று அதிகாலை எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம, கப்பரதோட்டை, அவெரிவத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

35 வயதான ஹோட்டல் உரிமையாளர் அவரது 14 வயதுடைய மகன் மற்றும் 31 வயதுடைய பெண் ஆகியோர் சம்பவத்தில் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் வெலிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment