அனைத்து மகளிர்களுக்கும் பியர் வயிறு அற்ற கணவனை பெற உரிமை உண்டு : மதுபானம், சிகரட் இனால் ஏற்படும் விளைவுகள் பற்றி வாழைச்சேனையில் விழிப்புணர்வு நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

அனைத்து மகளிர்களுக்கும் பியர் வயிறு அற்ற கணவனை பெற உரிமை உண்டு : மதுபானம், சிகரட் இனால் ஏற்படும் விளைவுகள் பற்றி வாழைச்சேனையில் விழிப்புணர்வு நிகழ்வு

YAN SRI LANKA இளைஞர் வலயமைப்பின் மூலம் அகில இலங்கை ரீதியாக 25 மாவட்டங்களிலும் மதுபானம் மற்றும் சிகரட் இனால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகிறது. 

அந்த வகையில் திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டமானது YAN SRI LANKA (YOUTH ACTION NETWORK) இளைஞர் வலயமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வானது YAN இளைஞர் வலயமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இயக்குனர்கள் எல்டீ. ரிஜா முஹம்மத், எஸ். அஸீம், என். துவரக போன்றோரின் தலைமையில் வாழைச்சேனை போலீஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது. 

மது பாவனையால் குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற முரண்பாடுகள் கிராமங்களில் ஓரளவில் காணப்படுகின்றது என்றும் எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது அனைத்து மகளிர்களுக்கும் பியர் வயிறு அற்ற கணவனை பெற உரிமை உண்டு, சாராயக் கம்பனிகளின் தந்திரோபாயங்களுக்கு ஏமாறும் ஏமாளிகளை மூளை உள்ள எந்த பெண் தான் விரும்புவாள்?

போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா் மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

No comments:

Post a Comment