பல்கேரியாவில் பஸ் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலி - News View

Breaking

Tuesday, November 23, 2021

பல்கேரியாவில் பஸ் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலி

பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பஸ் தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02:00 மணிக்குப் பிறகு (00:00 GMT) போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோவ், தனியார் தொலைக்காட்சி சேவையான BTV விடம் தெரிவித்தார்.

விபத்திலிருந்து 7 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி பஸ் பயணித்ததாக நம்பப்படுகிறது.

திங்கட்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியை காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாசிடோனியாவின் பிரதமர் ஜோரன் சேவ் ஏற்கெனவே பல்கேரிய பிரதமரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் பற்றி விவாதித்ததாக பிடீவி கூறுகிறது.

No comments:

Post a Comment