அரசாங்கம் எந்த இலக்கை நோக்கி நகர்கிறது என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை : மக்கள் பிரதிநிதிகள் தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை - சந்திம வீரக்கொடி - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

அரசாங்கம் எந்த இலக்கை நோக்கி நகர்கிறது என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை : மக்கள் பிரதிநிதிகள் தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை - சந்திம வீரக்கொடி

(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மக்களிள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டால் பெரும் விளைவுகள் ஏற்படும். அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் மக்கள் பிரதிநிகளுக்கும்,அரச அதிகாரிகளுக்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் எந்த இலக்கை நோக்கி நகர்கிறது என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில் அப்பொருட்களுக்கு தட்டுப்பாடு உயர்மட்டத்தில் காணப்படுகிறது.

டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் சிறந்த பொருளாதார கொள்கைகயை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை செயற்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை துரிதகரமாக முன்னேற்றுவதற்கு பொருத்தமான பொதுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பது பிரச்சினைக்குரியது.

தென்னாசிய வலய நாடுகளில் ஒன்றான மாலைத்தீவு கொவிட் தாக்கத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழிலை சிறந்த முறையில் கட்டியெழுப்பியுள்ளது.

மறுபுறம் தேசிய ஏற்றுமதி பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது அது குறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

நாட்டுக்கு கொண்டு வரப்படும் முதலீடுகள் ஒன்றுக்கொன்று முரன்பட்ட தன்மையில் காணப்படுகின்றன.

யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களால் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுவது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். மக்கள் பிரதிநிதிகள் தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளன.

விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து அவசரமான முறையில் இந்தியாவில் இருந்து நெனோ-நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. திரவ உரம் இறக்குமதி செய்வதற்கு முன்னர் அதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதா என்பதற்கு உரிய தரப்பினர் இதுவரையில் பதிலளிக்கவில்லை. அரசாங்கம் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது என்பதை எம்மால் அறிய முடியவில்லை என்றார்.

No comments:

Post a Comment