சட்டத்தால் கொவிட் பரவலை கட்டுப்படுத்த இயலாது - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

சட்டத்தால் கொவிட் பரவலை கட்டுப்படுத்த இயலாது - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

கொவிட் அபாயம் குறித்த யாதார்த்தத்தை உணர்ந்து, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கொவிட் ஒழிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். மாறாக சட்டத்தின் ஊடாக இதனைக் கட்டுப்படுத்த முயற்சித்தால் கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருக்கு சமூகத்தில் எதிர்ப்புக்கள் வலுவடையும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

முன்னாள் சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது என்பதில் தெளிவில்லாமலுள்ளது என்றும் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த தினங்களாக முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களுடன் தொடர்புடைய சமூக ஒன்றுகூடல்கள் அனைத்தும் இதன் கீழ் உள்ளடங்குகிறது.

எனவே இனிவரும் நாட்களில் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டம் புதிய சட்டமாக கொண்டு வரப்பட்டமைக்கான தேவை என்ன என்பது பற்றி எமக்கு தெளிவில்லாமலுள்ளது.

எவ்வாறிருப்பினும் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக முன்னாள் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் ஏற்பாடுகளுக்கமையவும் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு தமது உறவினர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகக் கூடும், உயிரிழக்கக் கூடும் என்பதையும் உணர்ந்து சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கொவிட் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமேயன்றி, சட்டத்தின் ஊடாக இதனைக் கட்டுப்படுத்த முயற்சித்தால் கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருக்கு சமூகத்தில் எதிர்ப்புக்கள் வலுவடையும்.

அத்தோடு கொவிட் கட்டுப்படுத்தலுக்காக தற்போது மக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் ஒத்துழைப்பும் முற்றாகக் குறைவடைந்து, அதிகாரிகளுடன் அநாவசிய முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன என்றார்.

No comments:

Post a Comment