இலங்கை வருகிறார் ஐ.நா.வின் மத்திய கிழக்கு, ஆசியா, பசுபிக் பகுதிகளுக்கான உதவி பொதுச் செயலாளர் நாயகம் - News View

Breaking

Monday, November 22, 2021

இலங்கை வருகிறார் ஐ.நா.வின் மத்திய கிழக்கு, ஆசியா, பசுபிக் பகுதிகளுக்கான உதவி பொதுச் செயலாளர் நாயகம்

ஐ.நா.வின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான உதவி பொதுச் செயலாளர் நாயகம் மொஹமட் காலித் கியாரி நவம்பர் 23 முதல் 25 வரை இலங்கைக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை வரும் காலித் கியாரி, சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திர சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த விஜயம் அமையவுள்ளது.

2019. 28 மே அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், துனிசியாவைச் சேர்ந்த மொஹமட் காலித் கியாரியை மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசுபிக் ஆகிய நாடுகளுக்கான அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்கள் மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கான உதவிப் பொதுச் செயலாளராக நியமித்தார்.

No comments:

Post a Comment