கமல்ஹாசனுக்கு கொரோனா : இரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

கமல்ஹாசனுக்கு கொரோனா : இரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல்வேறு துறைகளில் கமல்ஹாசன் தொடர்ந்து இயங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ‘House of Khaddar’ என்ற பெயரில் பிரத்தியேக ஆடை வர்த்தகநாமத்தை உருவாக்கியுள்ளார். 

காதி ஆடைகளை மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமடைய செய்வற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். 

சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய கமலுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பலரும் அவர் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பதிவுகளை இட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ட்விற்றர் பதிவொன்றை இட்டுள்ளார்.

ஏற்கெனவே இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை அவர் போட்டுக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment