விருந்துபசார நிகழ்வினை சுற்றிவளைத்த பொலிஸார் : போதைப் பொருளுடன் 12 பேர் சிக்கினர் - News View

Breaking

Monday, November 22, 2021

விருந்துபசார நிகழ்வினை சுற்றிவளைத்த பொலிஸார் : போதைப் பொருளுடன் 12 பேர் சிக்கினர்

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் விருந்துபசார நிகழ்வினை சுற்றிவளைத்த பொலிஸார் போதைப் பொருளுடன் 12 நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த விருந்துபசார நிகழ்வு ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (21) இரவு இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 01 கிராம் 625 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளுடன் 6 சந்தேகநபர்களும், 01 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 2 சந்தேகநபர்களும், மூன்று கிராம் 600 கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 கிராம் 25 கிராம் க்ரூஸ் போதைப் பொருளுடன் 2 சந்தேகநபர்களும் மற்றும் ஒரு கிராம் 700 மில்லி கிராம் ஹேஸ் ரக போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அம்பாறை, தல்பே, மெதகம, மாத்தறை, தனமல்வில, திஸ்ஸமஹாராம மற்றும் கோனபினுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் நேற்றையதினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment