இந்தியாவில் அதிகரித்தது கொரோனா - News View

Breaking

Wednesday, November 24, 2021

இந்தியாவில் அதிகரித்தது கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 7 ஆயிரத்து 579 ஐ விட சற்று அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 35 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 949 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்து 45 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்கத்திற்கு கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 66 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment