பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சியை எச்சரித்தார் சபாநாயகர் - News View

Breaking

Wednesday, November 24, 2021

பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சியை எச்சரித்தார் சபாநாயகர்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சியினால் சபையில் பெண்கள் தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கி ஆற்றிய உரை தொடர்பில் எனது கவலையை தெரிவிப்பதுடன் இவ்வாறான மோசமான வார்த்தைகளை சபையில் பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கின்றேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியதுபோது சபாநாயகர் அறிவிப்பு நேரத்தில், குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி கடந்த 20 ஆம் திகதி வரவு செலவு திட்ட விவாதத்தில் ஆற்றிய உரையில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் பாராளுமன்றத்துக்கு வெளியில் இருக்கும் பெண்களின் பெயர்களை தெரிவித்து, இந்த சபையை அகெளரவப்படுத்தும் வகையில் விசேடமாக பெண்கள் தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கி மேற்கொள்ளப்பட்ட உரை தொடர்பாக பாராளுமன்ற பெண்கள் அமைப்பு மற்றும் பாராளுமன்ற ரோஹினி குமாரியின் சிறப்புரிமை கேள்வியை ஆளமாக ஆராய்ந்து பார்த்தேன்.

அதன் பிரகாரம் திஸ்ஸ குட்டியாரச்சியினால் சபையில் பெண்கள் தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கி ஆற்றிய உரை தொடர்பில் எனது கவலையை தெரிவிப்பதுடன் இவ்வாறான மோசமான வார்த்தைகளை சபையில் பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் எச்சிரிக்கை விடுக்கின்றேன்.

இந்த நிலைமையை தொடர்ந்து பாராளுமன்ற சபைக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டுசென்றால், நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபையின் கெளரவத்தை பாதுகாத்துக்குக் கொள்ளும் பொருட்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு நேரிடும் என்றார்.

No comments:

Post a Comment