(எம்.எப்.எம்.பஸீர்)
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு வீடியோ படம் எடுத்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தளதா மாளிகை பொலிஸார் தெரிவித்தனர்.
தலதா மாளிகை வளாகத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ததாகவும், தனது யூ ரியூப் அலைவரிசைக்காக அந்த காணொளிகளை எடுத்ததகவும் பங்களாதேஷ் பிரஜை பொலிஸ் விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் ட்ரோன் கமரா, தொலைபேசி, கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றை பொறுப்பேற்றுள்ள பொலிசார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமில் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, சுற்றுலா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment