வட மாகாண இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு - News View

Breaking

Wednesday, November 24, 2021

வட மாகாண இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு

வட மாகாண இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வு, வவுனியாவில் இரு தினங்களாக இடம்பெற்றன.

பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு மற்றும் ஆளணி பிரிவினரால் இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. 

பொலிஸ் சேவையில் தமிழ் மொழி மூல ஆளணியை அதிகரிக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட இந்தப் பரீட்சை, வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதற்கு, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

தமிழ் இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து தமது கல்வித் தகைமை மற்றும் உடற் தகுதி என்பவற்றை வெளிப்படுத்தி நேர்முகத் தேர்வில் பங்கு பற்றினர்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment