முன்னாள் எம்.பிக்கள் வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க உள்ளிட்டோருக்கு பிடியாணை - News View

Breaking

Monday, November 15, 2021

முன்னாள் எம்.பிக்கள் வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க உள்ளிட்டோருக்கு பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரோஜர் செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி, ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் ராட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, அப்போதைய தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களான குறித்த மூவரும்​​பௌத்தாலோக மாவத்தை மற்றும் ஹெவ்லொக் வீதிளில் இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளனன.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (15) எடுத்துக் கொள்ளப்பட்டபோது அதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமை தொடர்பிலேயே நீதிமன்றம் இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கை எதிர்வரும் 2022 மார்ச் மாதம் 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment