நீர்கொழும்பு - கரையோர வீதி மீன் சந்தையின் செயற்பாடுகளை புனித செபஸ்தியார் தேவாலயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

நீர்கொழும்பு - கரையோர வீதி மீன் சந்தையின் செயற்பாடுகளை புனித செபஸ்தியார் தேவாலயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா

(எம்.மனோசித்ரா)

நீர்கொழும்பு மாநகர சபையில் தீர்மானத்தை நிறைவேற்றி நீர்கொழும்பு - கரையோர வீதி புனித செபஸ்தியார் மீன் சந்தையின் செயற்பாடுகளை புனித செபஸ்தியார் தேவாலயத்திடம் ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

நீர்கொழும்பு - கரையோர வீதி புனித செபஸ்தியார் மீன் சந்தையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அதன் உரிமத்தை புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு வழங்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் குறித்த தேவாலயத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் ஒன்றிணைந்த மீனவ சங்கம் என்பவற்றின் தலையீட்டுடன் குறித்த மீன் சந்தையை நவீன மற்றும் புதிய வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்ட போதிலும், அதற்கு உரிய நிறுவனங்களால் நிதி வழங்கப்படாமை தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த மீன் சந்தையை அபிவிருத்தி செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் இதற்கு தேவையான அனுமதியை நீர்கொழும்பு மாநகர சபையிடமிருந்து பெற்றுத் தருவதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

மீன் சந்தையில் கொங்கிறீட் மற்றும் வடிகால் அமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவிகளை கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு அமைச்சு வழங்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

நீர்கொழும்பு மாநகர சபையில் தீர்மானத்தை நிறைவேற்றி மீன் சந்தையின் செயற்பாடுகளை புனித செபஸ்தியார் தேவாலயத்திடம் ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் நீர்கொழும்பு மேயர் தயான் லான்சா, கரையோர புனித செபஸ்தியார் தேவாலயத்தின் பிரதம அருட்தந்தை, ஒன்றிணைந்த மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment