ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ், மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான தனது சேவையினை நேற்று மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அதன்படி ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸின் SU284 என்ற முதல் விமானம் நேற்று 240 பயணிகளுடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ரஷ்யாவின் இந்த விமான சேவை தொடக்கத்தில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு இருமுறை தனது சேவையினை முன்னெடுக்கும்.
மேலும் இதனை எதிர்காலத்தில் வாரத்திற்கு 5 முறை வரை இந்த சேவையை அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஏரோஃப்ளோட்-ரஷியன் ஏர்லைன்ஸ், கொழும்பிற்கு விமானங்களை இயக்கிய மிகப் பழமையான சர்வதேச விமான நிறுவனமாகும். மேலும் 1964 முதல் மொஸ்கோ-கொழும்பு வழியை இயக்கி வருகிறது.
கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் காரணமாக ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் 2020 இல் கொழும்புக்கான சேவையினை நிறுத்த வேண்டியிருந்தது.
No comments:
Post a Comment