தடுப்பூசிச் சான்றிதழ்களில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் - News View

Breaking

Wednesday, November 24, 2021

தடுப்பூசிச் சான்றிதழ்களில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் அதன் தடுப்பூசிச் சான்றிதழ்களில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது.

சான்றிதழ்கள் செல்லுப்படியாகும் அவகாசம், பூஸ்டர் தடுப்பூசி விபரங்கள் ஆகிய தகவல்கள் சான்றிதழ்களில் சேர்த்துக் கொள்ள ஒன்றியம் திட்டமிடுகிறது. 

அதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளோர், தடையின்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

ஐரோப்பாவில் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையே அத்தியவாசியமற்ற பயணங்கள் தொடர்பில், பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்தப் பரிந்துரைகளை மாற்றியமைக்கும் ஆவணங்களை ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பிக்கவுள்ளது. இருப்பினும், பயணங்களைக் கட்டுப்படுத்த எந்தத் திட்டமும் இல்லை.

No comments:

Post a Comment