சபுகஸ்கந்த அருகில் பயணப் பொதியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது - News View

Breaking

Friday, November 5, 2021

சபுகஸ்கந்த அருகில் பயணப் பொதியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் மீட்கப்பட்ட சடலம், 42 வயதுடைய பெண்ணொருவரின் சடலமென விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் என, குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் (04) சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பயணப்பொதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ தெரிவித்திருந்தார்.

குறித்த பகுதியிலுள்ள வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் குறித்த பயணப்பொதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment