பிரிட்டன் தடைக்கு ஹமாஸ் கண்டனம் - News View

Breaking

Tuesday, November 23, 2021

பிரிட்டன் தடைக்கு ஹமாஸ் கண்டனம்

பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத குழுவாக பிரிட்டன் அறிவித்ததற்கு அந்த அமைப்பு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 

இந்த தடை மூலம் அந்த அமைப்புக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

அடுத்த வாரம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்தத் தடையை கொண்டுவரவிருக்கும் உள்துறை செயலாளர் பிரித்தி படேல், ஹமாஸ் அரசியல் மற்றும் ஆயுதப் பிரிவுகளை வேறுபடுத்தி பார்க்க சாத்தியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அடிப்படையில் கடுமையான யூத எதிர்ப்பு அமைப்பு என்றும் யூத சமூகத்தை பாதுகாக்க வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ஹமாஸ் அமைப்பு: “பஸ்தீன மக்களுக்கு எதிரான (பிரிட்டனின்) வரலாற்றுப் பாவத்தை சரி செய்வது மற்றும் மன்னிப்புக் கேட்பதற்கு பதில், பாதிக்கப்பட்டவர்களின் இழப்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

சியோனிச அமைப்புக்கு பலஸ்தீன நலங்களை வழங்கிய பல்போர் பிரகடனம் மற்றும் பிரிட்டிஷ் அணையையே இதில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment