முத்துராஜவெல அபயபூமி பகுதி குறித்து தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருகிறது : மக்கள் குழப்பமடைய வேண்டாமென்கிறார் நாலக்க கொடஹேவா - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

முத்துராஜவெல அபயபூமி பகுதி குறித்து தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருகிறது : மக்கள் குழப்பமடைய வேண்டாமென்கிறார் நாலக்க கொடஹேவா

(எம்.எம்.சில்வெஸ்டர்)

முத்துராஜவெல அபயபூமி பகுதி குறித்து தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பலரும் பல்வேறு விதமான தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த வர்த்தமானி அறிவித்தல் குறித்து பலருக்கும் சரியான புரிதல் இல்லாதமையே இதற்கான காரணம் என நகர அபிவிருத்தி, க‍ரையோர பாதுகாப்பு மற்றும் கழிவுப் பொருள் அகற்றல் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள குறித்த நிலப்பகுதியில் பெரும்பாலனவை நீர்கொழும்பு களப்பைச் சேர்ந்ததாகும். இதை விடுத்துப் பார்த்தால், முத்துராஜவெல அபயபூமி ஈர நிலப்பரப்பை விடவும் சிறிதளவு ஈரநிலப் பகுதியை‍ையே நாம் எடுக்கவுள்ளோம்.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தெளிவுப்படுத்துவற்காக வெள்ளிக்கிழமை (12) ஏற்பாடு செய்திருந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதியன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி நாம் மக்கள் வாழும் நிலப்பகுதியை அல்லாது கடற்க‍ரை பகுதியிலான களப்பு பகுதியையையே கைப்பற்றவுள்ளோம்.

குரண - மேற்கு கிராம சேவகர் பிரிவிலேயே குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. அந்தப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களை நாம் எக்காரணம் கொண்டும் கைப்பற்ற மாட்டோம்.

எனினும், வரைபடத்தில் நாம் கைப்பற்றப்போகும் எல்லைகளை அடையாளப்படுத்திக் காட்ட வேண்டுமென்பதற்காகவே, குரண - மேற்கு பிரிவை அடையாளப்படுத்தினோம்.

மக்களின் குடியிருப்புப் பகுதிகள் கைப்பற்றப்படும் என வர்த்மானி அறிக்கையின் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

முத்துராஜவெல அபயபூமி பகுதி குறித்து தவறான கருத்து சமூகமயப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பலரும் பல்வேறு விதமான தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த வர்த்தமானி அறிவித்தல் குறித்து பலருக்கும் சரியான புரிதல் இல்லாதமையே இதற்கான காரணம்" என்றார்.

No comments:

Post a Comment