ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிக்கான 12 பேர் கொண்ட இலங்கை குழாம் தெரிவு - News View

Breaking

Friday, November 12, 2021

ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிக்கான 12 பேர் கொண்ட இலங்கை குழாம் தெரிவு

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இம்மாதம் 19 ஆம், 20 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய ரக்பி செவன்ஸ் ரக்பி தொடரில் பங்கேற்கச் செல்வதற்காக தெரிவு செய்யப்பட்ட 20 பேர் கொண்ட முதற்கட்ட இலங்கை ரக்பி குழாத்திலிருந்து 12 பேர் கொண்ட இறுதி குழாத்தை இலங்கை ரக்பி சம்மேளனம் தெரிவு செய்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட இலங்கை ரக்பி அணிக்கு தலைவராக அதீஷ வீரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போட்டித் தொடருக்கான பங்கேற்கும் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 பேரை கடந்த வாரம் பயிற்சிகளுக்காக இலங்‍கை ரக்பி சம்மேளனம் அழைத்திருந்திருந்த நிலையில், அந்த வீரர்கள் வெளிக்காட்டியிருந்த திறமை மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் இந்த 12 பேர் கொண்ட இலங்கை ரக்பி குழாமை அசோக்க ஜயசேனவின் தலைமையிலான இலங்கை ரக்பி தெரிவுக் குழு தெரிவு செய்துள்ளது.

தெரிவு செய்யப்பட்டுள்ள 20 பேர் கொண்ட இலங்கை ரக்பி குழாத்தில் அதீஷ வீரதுங்க (அணித்தலைவர்), சாமுவேல் ஒகேபேபோர், கான்ச்சன ராமநாயக்க, அஞ்சுல ஹெட்டியாரச்சி, குஷான் இந்துனில், சுதாரக்க திக்கும்புர, இரோஷன் சில்வா, இஷார மதுஷான், ஜனிந்து டில்ஷான், நுவன் பெரேரா, நிஷோன் பெரேரா , சச்சித் சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment