தடுப்பூசி அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் - அமைச்சர் கெஹலிய - News View

About Us

About Us

Breaking

Thursday, November 11, 2021

தடுப்பூசி அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் - அமைச்சர் கெஹலிய

பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் முதல் கட்டம் நேற்று (11) திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையிலுள்ள வைத்தியசாலையொன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய புற்றுநோய் சிகிச்சை நிலையமாக இது கருதப்படுகிறது.

12 மாடிகள் கொண்ட திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 33% நிறைவடைந்துள்ளன. 600 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை நிலையத்திற்கு சுமார் 1945 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு வசதியாக இருக்கும். இதன் எதிர்கால கட்டுமானமும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment