நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Friday, November 5, 2021

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

(எம்.மனோசித்ரா)

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என்றும் , அதனை முழுமையாக மூடிவிடுமாறும் வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாளை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு முன் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபைக்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டாம் என்றும், அதனை மூடுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

காரணம் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதும் பின்னர் இரத்து செய்வதற்கும் மாத்திரமே இருக்கிறது. இதனை செய்து கொண்டு பொதுமக்களின் வரிப்பணத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை ஊழியர்களுக்கு ஊதியமளிப்பது பிரயோசனமற்றது.

தற்போது வியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர். அவ்வாறெனில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை என்ற ஒன்று எதற்கு? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment