மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு ! - News View

Breaking

Friday, November 5, 2021

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அரச வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று பகல் 12.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தங்களது சம்பளப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை சம்பள உயர்வு வழங்குகின்ற போதும் கடந்த மூன்று வருட காலங்களாக குறித்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றுடன் 61 நாட்கள் கடந்தும் நிதியமைச்சு தங்களது சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு உடன் படவில்லை என்றும் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமான குறித்த போராட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பாரியளவில் முன்னெடுக்கவுள்ளதாக எச்சரித்துள்ளனர்.

கொரோனா காலங்களில் தனியார் வங்கிகள் மூடப் பட்டிருந்த போதிலும் அரச வங்கிகள் மக்களுக்கான சேவையை முன்னெடுத்திருந்தனர் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment