வடக்கில் சமூக பொலிஸ் பிரிவு ஆரம்பிக்க திட்டம் : அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்க ஆளுநர் திட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

வடக்கில் சமூக பொலிஸ் பிரிவு ஆரம்பிக்க திட்டம் : அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக சமூக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக பொலிஸ் துறையினர் என்ற பெயரில் செயற்படவுள்ள இந்தத் திட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள் திறமை அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இந்தத் திட்டம் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த அணிகளை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment