சோற்றுப் பார்சல், தேநீர் விலைகள் அதிகரிப்பு - News View

Breaking

Monday, November 22, 2021

சோற்றுப் பார்சல், தேநீர் விலைகள் அதிகரிப்பு

சோற்றுப் பார்சல் ஒன்றின் விலை ரூ. 20 இனாலும், தேநீர் ஒரு கோப்பையின் விலை ரூ. 5 இனாலும் நாளை (23) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து சோற்றுப் பார்சல், கொத்து பார்சல், பால் தேநீர், பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை ரூ. 10 இனால் அதிகரிப்பதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இதன்போது தேநீரின் விலையை ரூபா 25 ஆக தொடர்வதற்கு முடிவு செய்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்திருந்தார்.

சமையல் எரிவாயுவின் விலை மிகப் பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், சோற்று பார்சல் ஒன்றின் விலையை குறைந்தபட்சம் ரூ. 30 இனால் அதிகரிக்க வேண்டியுள்ள நிலை காணப்படுவதாகவும், ஆயினும் தற்போதுள்ள மக்கள் உள்ள நிலையைக் கருத்திற் கொண்டு ரூ. 10 இனால் மாத்திரம் அதனை அதிகரிப்பதாக அவர் அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், சோற்றுப் பார்சலின் விலையை ரூ. 20 இனாலும், தேநீர் கோப்பையை ரூ. 5 இனாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment