வட மாகாண அரச கட்டமைப்பு ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆதரங்களுடன் அறிவியுங்கள் என்கிறார் ஆளுநர் - News View

Breaking

Saturday, November 13, 2021

வட மாகாண அரச கட்டமைப்பு ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆதரங்களுடன் அறிவியுங்கள் என்கிறார் ஆளுநர்

(ஆர்.ராம்)

வட மாகாணத்தின் அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆதாரங்களுடன் தனக்கு அறிவிக்குமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கே அரச கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. நான் பதவியேற்று தற்போதைய காலம் வரையில் வட மாகாண அரச கட்டமைப்புக்களின் பல்வேறு மட்டங்கள் தொடர்பிலும் அவதானங்களையும் ஆய்வுகளையும் முன்னெடுத்து வருகின்றேன்.

இந்த நிலையில் என்னுடன் தொடர்பாடியவர்கள் வட மாகாண அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்கள்.

மேலும் சிலர் அவ்விதமான விடயங்கள் சம்பந்தமாக என்னைத் தொடர்பு கொள்ளவதற்கு அல்லது சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

அவ்வாறான நிலையில், ஊழல், மோசடிகள் தொடர்பில் ஆதராங்களுடன் யாரும் அறிவிப்புக்களையோ அல்லது நேரடியாகச் என்னைச் சந்தித்தோ தகவல்களை வழங்க முடியும்.

அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது, உரிய விசாரணைகளை மேற்கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment