பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, டின் மீன் உள்ளிட்ட பல பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, டின் மீன் உள்ளிட்ட பல பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

சீனி, பருப்பு, கோழி, ரின் மீன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு, பால் பவுடர் உள்ளிட்ட பல பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டை நீக்கி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குகிறது.

இதனால் சந்தையில் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment