விமானங்கள் ரத்து ! தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு பயணிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

விமானங்கள் ரத்து ! தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு பயணிகள்

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்துள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ‘ஒமிக்ரோன்’ என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வகையான ‘ஒமிக்ரோன்’ (Omicron) கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

மேலும் வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் 10 மடங்கு விரீயம் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போத்ஸ்வானா, ஹொங்கோங், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்திருப்பதால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

உறவினர்களை பார்ப்பதற்காகவும், தொழில் ரீதியாகவும் தென் ஆப்பிரிக்கா வந்தவர்கள் கடைசியாக கிடைத்த விமானங்களில் நாடு திரும்ப முயன்றனர்.

No comments:

Post a Comment