சவுதி அரேபியாவுக்கு 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் - News View

Breaking

Friday, November 5, 2021

சவுதி அரேபியாவுக்கு 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

சவுதி அரேபியாவுக்கு 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரியாத்திற்கு உதவும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக வியாழனன்று ஒரு அறிக்கையில் பென்டகன் உறுதிபடுத்தியது.

இந்த முன்மொழியப்பட்ட விற்பனையானது, மத்திய கிழக்கில் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய சக்தியாக தொடர்ந்து இருக்கும்.

நட்பு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை ஆதரிக்கும் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment