இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனாக பெறவுள்ள இலங்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, November 21, 2021

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனாக பெறவுள்ள இலங்கை

எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனாகப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறித்த ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையினால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அமெரிக்க டொலர்களின் இருப்புகளின்றி சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த வாரம் மூடப்பட்டதுடன், அதனை மீள ஆரம்பிக்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தை தேடுவதே உண்மையான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனாக இந்தியாவிடமிருந்து பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கேசரி

No comments:

Post a Comment