'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி மக்கள் அபிப்பிராயத்தைக் கோருகிறது : 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும் - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி மக்கள் அபிப்பிராயத்தைக் கோருகிறது : 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்

(இராஜதுரை ஹஷான்)

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற எண்ணக்கருவை செயற்படுத்தும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி சட்டவரையினை தயார் செய்வதற்காக பொதுசன அபிப்பிராயத்தை கோர தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நிறுவனம், குழு அல்லது தனி நபர் தங்களின் அபிப்பிராயங்களை ocol.consultations@gmail.com என்ற உத்தியோகப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

அல்லது செயலாளர், 'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி' செயலணி, தபால் பெட்டி இலக்கம் .504 கொழும்பு' என்ற முகவரிக்கு இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க முடியும்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' எண்ணக்கருவை செயற்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 26ஆம் திகதி பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணியை நியமித்தார்.

ஜனாதிபதி செயலணியினர் ஒவ்வொரு மாதம் ஜனாதிபதிக்கு முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் முழுமையான இறுதி அறிக்கை 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அத்தினத்தன்று சமர்ப்பிக்கப்படவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment