தாம் அறிந்த தகவல்களை கூற முயலும் போது எங்களை கைது செய்ய முயற்சிக்கின்றனர் - மனுஷ நாணயக்கார - News View

Breaking

Friday, November 12, 2021

தாம் அறிந்த தகவல்களை கூற முயலும் போது எங்களை கைது செய்ய முயற்சிக்கின்றனர் - மனுஷ நாணயக்கார

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாம் அறிந்த தகவல்களை கூற முயலும் போது எங்களை கைது செய்ய முயற்சிக்கின்றனர் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் குறைந்தப் பட்ச வயது சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், வனாத்தவில் சம்பவத்தை விடுதலைப் புலிகளின் மீது சுமத்த முற்பட்ட நிலையில் குண்டுத் தாக்குதலின் பின்னர் சீஐடியினர் பின்னர் அடிப்படை வாதிகளின் சம்பவம் என்பதனை வெளிப்படுத்தினர். புலனாய்வுத் துறையினர் சஹரானுக்கு சம்பளம் கொடுத்ததாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கூறியுள்ளனர். அதன்படி சஹரானுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அவரின் வீட்டுக்கு சென்றதை அவரின் மனைவி கூறியிருக்கலாம். ஏன் இதற்கு பதிலளிப்பதில்லை.

அப்போது சஹரானை கைது செய்வதற்கு நாலக சில்வா நடவடிக்கை எடுத்த போது, அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி செய்ய திட்டமிட்டதாக கூறி நாலக சில்வாவை கைது செய்து, சஹ்ரானின் கைதை தடுத்துள்ளனர். அதன் மூலம் சஹ்ரானின் பயணத்திற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்த போதும். சம்பவ தினத்தில் என் உயர் பொலிஸ் அதிகாரி விடுமுறையில் இருந்தார் என்பதனை கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் முன்னாள் சட்டமா அதிபரே விசாரணை அறிக்கையை முழுமையாக பார்த்துள்ளார். இது அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக சூழ்ச்சியின் பெறுபேறே என்று கூறியுள்ளார்.

நாங்கள் இதுபோன்ற கருத்துக்களை கூறும் போது வெளியில் வந்து கூறுமாறு கூறுகின்றனர். எங்களை கைது செய்ய முயற்சிக்கின்றனர். இதன் மூலம் எமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். எப்போதாவது உண்மை வெளியே வரும் என்றார்.

No comments:

Post a Comment