ஒரு போராட்டத்தின் மூலம் அரசாங்கம் பின்நகர்ந்துள்ளதால் 300 போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை முற்றாக மாற்றியமைப்போம் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

ஒரு போராட்டத்தின் மூலம் அரசாங்கம் பின்நகர்ந்துள்ளதால் 300 போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை முற்றாக மாற்றியமைப்போம் - சஜித் பிரேமதாச

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒன்றிணைக்கப்பட்ட மக்கள் படை கொழும்பை முடக்கி ஐந்து நாட்களின் பின்னர் அரசாங்கம் தனது தீர்மானத்தில் இருந்து பின்நகர்ந்துள்ளது. ஒரு போராட்டத்தின் மூலம் அரசாங்கம் பின்நகர்ந்துள்ளதால் 300 போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை முற்றாக மாற்றியமைப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமகி படையணியை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது இளைய தலைமுறையின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளன. இளைஞர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் இருப்பதை காணுவதன் ஊடாக அது புலப்படுகிறது.

நாட்டை ஆதரிக்கும் இளைஞர்கள் எதனையும் செய்ய முடியாமல் விரக்தி அடைந்துள்ளனர். இளைஞர்களின் விரக்தி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பல இருப்பினும் குறித்த பரிந்துரைகள் அனைத்தும் மீறப்படுகிறது. தற்போது பங்கேற்பு அரச நிர்வாகமே நாட்டுக்கு அவசியமாகும்.

தற்போது வசதியுள்ளோர் மற்றும் வசதியற்றோர் பரவல் நிலைமை பாரதூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொவிட் வறுமையும் அதற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

அறிவு, உண்மை, விஞ்ஞானம் மற்றும் தரவுகளின் அடிப்படையிலான யதார்த்தமான தீர்வுகளே நாட்டுக்கு தேவையாகும். பாரம்பரியத்தில் இருந்து விலகி நவீனத்துவத்துவத்துடன் பயணிப்பதுடன் அரசியலுக்குப் பதிலாக நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது.

நாட்டிற்கு பெறுமதி சேர்ப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். அதற்காக எந்த எதிர்க்கட்சியும் முன்னெடுக்காத பல்வேறு மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துள்ளோம். 33 வைத்தியசாலைகளில் 900 இலட்சத்திற்கும் அதிகமான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கியுள்ளோம்.

தடை செய்யப்பட்ட இரசாயண உரத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது. மக்கள் படை கொழும்பை முடக்கி ஐந்து நாட்களின் பின்னர் அரசாங்கம் தனது தீர்மானத்தில் இருந்து பின்நகர்ந்துள்ளது. ஒரு போராட்டத்தின் மூலம் அரசாங்கம் பின்நகர்ந்துள்ளதால் 300 போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை முற்றாக மாற்றியமைப்போம் என்றார்.

No comments:

Post a Comment