கொரோனாவால் மார்ச் 2022 க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் - எச்சரித்துள்ள WHO - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

கொரோனாவால் மார்ச் 2022 க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் - எச்சரித்துள்ள WHO

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளிலும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் ஐரோப்பாவின் 53 நாடுகளில் மேலும் 7 இலட்சம் போ் கொரோனாவுக்கு பலியாகும் அபாயம் நிலவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வரும் மார்ச் 2022 க்குள் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் 53 நாடுகளை ஐரோப்பிய பிராந்தியமாக வகைப்படுத்தியுள்ளது. அப்பிராந்தியத்தில் ஏற்கனவே 15 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

வரும் மார்ச் 2022 க்குள் 53 நாடுகளில் 49 நாடுகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகக்கடுமையான அல்லது மோசமான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம் என கணித்துள்ளது உலக சுகாதார ஸ்தாபனம்.

இது குறித்து அந்த அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐரோப்பாவில் தற்போதைய கொரோனா நிலவரம் தொடா்ந்தால், குளிா்காலம் கடந்து மாா்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்துக்குள் அந்தப் பிராந்தியத்தில் கூடுதலாக 7 இலட்சம் போ் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான மக்களின் நோயெதிா்ப்புத் திறன் குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் ஒரு பகுதியாக இன்னும் அதிகமானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

இரு தவணை கொரோனா தடுப்பூசிகளுக்குப் பிறகு 3 ஆவதாக ‘பூஸ்டா்’ தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, 60 வயதுக்கு மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் போன்ற கொரோனா மரண அபாயம் நிறைந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய மண்டல இயக்குநா் ஹன்ஸ் கிளக் கூறுகையில், ‘ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் கொரோனா நிலவரம் மிக மோசமாக உள்ளது. இது தவிர, நாம் குளிா்காலத்தை எதிா்நோக்கியுள்ளோம். அது, கொரோனா பரவல் அபாயத்தை மேலும் அதிகரிக்கும். எனினும், நாம் சுகாதாரப் பணியாளா்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்றாா்.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகமும், ‘பூஸ்டா்’ தடுப்பூசிகள் செலுத்தப்படுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஏற்கெனவே இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, முழுமையான நோயெதிா்ப்பு ஆற்றல் கிடைத்த பிறகும், அந்த ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக ‘பூஸ்டா்’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், முதல் இரு தவணை கொரோனா தடுப்பூசி தேவைப்படும் பலருக்கு அந்தத் தடுப்பூசிகள் கிடைக்காமல் போவதாகவும் அதனைத் தவிா்க்க இந்த ஆண்டு முழுவதும் பூஸ்டா் தடுப்பூசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது.

ஐரோப்பாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1,386,773 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுவரை 70,925,345 பேருக்கு அந்த அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய பிராந்தியத்தில் ஏற்படும் உயிரிழப்புகளின் முக்கிய காரணியாக கொரோனா வைரஸ் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் எடுக்கும் கட்டாய தடுப்பூசித் திட்டம், ஊரடங்கு போன்றவைகளை மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment