U.K, Flexicare குழுமத்தின் துணை நிறுவனமான Flexicare Lanka நிறுவனம் இலங்கையில் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி நிலையத்தை பண்டாரகமவில் திறந்து வைத்துள்ளது.
15 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இது, புதிய புத்தாக்க மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையாகும்.
தற்போதுள்ள 150 பணியாளர்களுடன் நாட்டில் அதன் முதல்கட்ட நடவடிக்கைகளை அது ஆரம்பித்துள்ளது.
பண்டாரகமவில் அண்மையில் நடைபெற்ற பிரம்மாண்டமான திறப்பு விழாவில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் Flexicare உற்பத்தி தொழிற்சாலை, உத்தியோகபுர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கெளரவ விருந்தினர்களாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sara Hulton) மற்றும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் விசேட அதிதியாக முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, Flexicare Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊடக நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு கெளரவ விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதம அதிதி பசில் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சாதன உற்பத்தி நிறுவனமான Flexicare நிறுவனத்திற்கு, குறிப்பாக உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் இலங்கையில் தனது முதலீட்டுத் தெரிவை மேற்கொண்டமை தொடர்பில் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Flexicare இன் உயிர் நிலைபேறுத்தன்மை மற்றும் உயிர்காக்கும் தயாரிப்புகள் எமது சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, உலக அளவில் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தப் போவதைக் காண்பதில் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது” என்றார்.
No comments:
Post a Comment