முழு நாட்டையும் ஒன்றாக கருதி வடக்கு கிழக்கு உட்பட 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 4917 உள்ளுராட்சி பிரிவுகளுக்கும் சமமான நிதி - பசில் ராஜபக்‌ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

முழு நாட்டையும் ஒன்றாக கருதி வடக்கு கிழக்கு உட்பட 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 4917 உள்ளுராட்சி பிரிவுகளுக்கும் சமமான நிதி - பசில் ராஜபக்‌ஷ

முழு நாட்டையும் ஒன்றாக கருதி வடக்கு கிழக்கு உட்பட 14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 4917 உள்ளுராட்சி பிரிவுகளுக்கும் கட்சி, இன மத குல பேதமின்றி ஒரே அளவான நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

கொவிட்டினால் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்து வரவு செலவுத்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளடங்காக சகல தரப்பினருக்கும் நிவாரணம் வழங்க பின்நிற்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022 வரவு செலவுத் திட்ட இறுதிநாள் விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எமக்குள்ள சவால்களை நான் முன்வைத்தேன். அதனைதான் எதிரணியும் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தெரிவித்தன. ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் முன்வைத்த சகல யோசனைகளும் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து தேவையான முடிவுகளை எடுப்போம்.

அரச சேவை சம்பள முரண்பாட்டை தீர்க்க புதிய சம்பள முறையொன்றை தயாரிக்க இருக்கிறோம். சம்பள நிர்ணய ஆணைக்குழுவுக்கு யோசனை முன்வைத்து தேவையான மாற்றம் செய்வோம். சுகாதார சேவை சம்பள முரண்பாடு தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செலாவணி பிரச்சினைக்கு தீர்வு யோசனை எதுவும் எதிர்த்தரப்பால் முன்வைக்கப்படவில்லை. அந்நியச் செலாவணி, வெளிநாட்டு முதலீடு, தேவையாற்ற சட்டங்களை இலகுபடுத்த இருக்கிறோம். இதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

மழை குறைந்ததும் எதிர்வரும் மாதங்களில் மரக்கறி, கருவாடு என்பன சந்தைக்கு வரும்.

கொவிட் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளடங்காக சகல தரப்பினருக்கும் நிவாரணம் வழங்க பின்நிற்க மாட்டோம்.

தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை நாம் கிராமத்திற்கு வழங்கியுள்ளோம்.

வடக்கு கிழக்கு பிரதேச எம்.பிகள் தமது பிரதேசங்களுக்கு விசேட திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். முழு நாட்டையும் ஒன்றாக கருதி வடக்கு கிழக்கு உட்பட 14021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 4917 உள்ளுராட்சி பிரிவுகளுக்கும் கட்சி இன மத குல பேதமின்றி ஒரே அளவான நிதி வழங்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய வடக்கு பிரதேசங்களுக்கு விசேட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுத்ததாலே அப்பகுதிகளை ஏனைய பகுதிகளுக்கு சமமாக அபிவிருத்தி செய்துள்ளோம்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment