பிரபல பாடகர் லக்‌ஷ்மன் விஜேசேகர காலமானார் - News View

Breaking

Friday, November 12, 2021

பிரபல பாடகர் லக்‌ஷ்மன் விஜேசேகர காலமானார்

இலங்கை சினிமாவின் பிரபல பாடகரும், நடிகருமான லக்‌ஷ்மன் விஜேசேகர காலமானார்.

சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 73ஆவது வயதில் இன்று (12) பிற்பகல் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர், இசையமைப்பாளர் என பல பரிணாமங்களைக் கொண்ட அவர், ஒரு சில சிங்கள நாடகங்களிலும் நடித்துள்ளார்.

நாளைய தினம் (13) அவரது உடல் கல்கிஸ்ஸையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நாளை மறுதினம் (14) கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment