இதுவரை தடுப்பூசி பெறாத பல்கலைக்கழக மாணவர்களுக்கான U.G.C யின் முக்கிய அறிவிப்பு - News View

Breaking

Wednesday, October 6, 2021

இதுவரை தடுப்பூசி பெறாத பல்கலைக்கழக மாணவர்களுக்கான U.G.C யின் முக்கிய அறிவிப்பு

ஒக்டோபர் மாதம் திங்கட்கிழமை (11 ஆம் திகதி) முதல் வெள்ளிக்கிழமை (15 ஆம் திகதி) வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பல்கலைக்கழகத்திற்குச் சென்று கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம்.

இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுகாதார அமைச்சால் அனுப்பப்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்படவுள்ளன.

பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் கூறுகையில், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை இயல்பாக்குவதை துரிதப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படுவதாகவும், தடுப்பூசி போடப்படாத அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அருகில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு வந்து விரைவில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment