உலகளாவிய ரீதியில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Facebook, WhatsApp, Instagram சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.
தாய் நிறுவனமான Facebook நிறுவனத்தின் செயலிகளே இவ்வாறு முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது அந்நிறுவனத்தின் செயற்பாட்டில் ஒரு பாரிய வலையமைப்பு ரீதியான பின்னடைவாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து Twitter தளத்தில் பதிவொன்றையும் Facebook இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சிலருக்கு எமது செயலிகள் மற்றும் உற்பத்திகளை அடைவதில் சிக்கல்கள் உள்ளதை நாம் அறிகின்றோம். முடிந்தளவு விரைவாக அதனை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம், அது தொடர்பில் ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு நாம் வருந்துகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment